Todays Important Historical Events ~22 June2021~ வரலாற்றில் இன்றைய நாள்
22 June2021~ வரலாற்றில் இன்றைய நாள்
1633 – அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி (படம்) உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
1658 – போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.
1897 – பிரித்தானியக் குடியேற்ற அதிகாரிகள் சார்லசு ராண்ட், சார்லசு ஏயர்ஸ்டு ஆகியோர் இந்தியாவின் புனே நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.
1941 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.
1978 – புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1992 – வாச்சாத்தி வன்முறை: தமிழ்நாட்டில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் நடத்திய வன்முறைகளில் 34 பேர் உயிரிழந்தனர்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.