Todays Important Historical Events ~27 June2021~ வரலாற்றில் இன்றைய நாள்
27 June2021~ வரலாற்றில் இன்றைய நாள்
1556 – தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
1806 – டச்சு இலங்கையில் கத்தோலிக்கர் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
1844 – பின்னாள் புனிதர்களின் கிறித்து சபையை நிறுவிய இரண்டாம் யோசப்பு இசுமித்தும் (படம்) அவரது சகோதரரும் இலினொய் சிறையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1941 – உருமேனியா லாசி நகரில் யூதர்களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது. இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1954 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினின்ஸ்க் நகரில் திறக்கப்பட்டது.
1981 – சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு தனது “மக்கள் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதில் இருந்து நமது கட்சியின் வரலாறு பற்றிய சில கேள்விகள் பற்றிய தீர்மானத்தை” வெளியிட்டது. இதில் சீனப் பண்பாட்டுப் புரட்சியின் விளைவுகளுக்காக மா சே துங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
1982 – கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.