Todays Important Historical Events ~28 June2021~ வரலாற்றில் இன்றைய நாள்
28 June2021~ வரலாற்றில் இன்றைய நாள்
1904 – டென்மார்க் பயணிகள் கப்பல் வடக்கு அத்திலாந்திக் பெருங்கடலில் சிறிய திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் உயிரிழந்தனர்.
1914 – ஆத்திரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், அவரது மனைவி இளவரசி சோஃபி ஆகியோர் சாரயேவோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது காவ்ரீலோ பிரின்சிப் என்ற பொசுனிய-செர்பிய தேசியவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் தொடங்க இது காரணமானது.
1919 – வெர்சாய் ஒப்பந்தம் (படம்) பாரிசில் கையெழுத்திடப்பட்டது. செருமனிக்கும் முதலாம் உலகப் போரின் நேச அணிகளுக்கும் இடையில் போர் முடிவுக்கு வந்தது.
1948 – பனிப்போர்: டீட்டோ–இசுட்டாலின் பிரிவை அடுத்து யுகொசுலாவியப் பொதுவுடமைவாதிகளின் அணி கொமின்ஃபோர்மில் இருந்து நீக்கப்பட்டது.
1950 – கொரியப் போர்: 100,000 இற்கும் அதிகமான பொதுவுடமை சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1995 – மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.