Todays Important Historical Events ~5 June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்
1862 – தெற்கு வியட்நாமின் சில பகுதிகளை பிரான்சிற்கு அளிக்கும் உடன்பாடு சாய்கோன் நகரில் எட்டப்பட்டது.
1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1959 – லீ குவான் யூ (படம்) தலைமையில் சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
1974 – பொன். சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றிவளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.
1984 – புளூஸ்டார் நடவடிக்கை: இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் படி, சீக்கியர்களின் பொற்கோயில் மீது இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1995 – போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் முதன் முதலாக உருவாக்கப்பட்டது.