Historical Events

Todays Important Historical Events ~8 June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்

1783 – ஐசுலாந்தில் லாக்கி (படம்) எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் உயிரிழந்தனர். அடுத்த ஏழாண்டுகள் அங்கு பஞ்சம் நிலவியது.
1856 – 194 பிட்கன் தீவினரைக் கொண்ட ஒரு குழு நோர்போக் தீவை அடைந்து அத்தீவில் மூன்றாவது குடியிருப்பை ஆரம்பித்தனர்.
1953 – வாசிங்டன் உணவகங்களில் கறுப்பினத்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
1967 – ஆறு நாள் போர்: அமெரிக்காவின் லிபர்ட்டி என்ற ஆய்வுக் கப்பல் இசுரேலின் வான்படையினரால் குண்டு வீசித் தகர்க்கப்பட்டதில் 34 பேர் கொல்லப்பட்டனர், 171 பேர் காயமடைந்தனர்.
1972 – வியட்நாம் போர்: ஒன்பது வயது சிறுமி நேப்பாம் குண்டு வீசப்பட்டதில் காயமடைந்தது வீதி வழியே ஓடி வருவதை அசோசியேட்டட் பிரெசு செய்தியாளர் படம் பிடித்தார். இப்படத்திற்கு பின்னர் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது.
2004 – 1882 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு அவதானிக்கப்பட்டது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!