Today’s Important Historical Events ~July 1, 2021~ வரலாற்றில் இன்றைய நாள்
ஜூலை 1: கனடா நாள்
1825 – ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
1874 – முதலாவது வணிகரீதியிலான தட்டச்சுக் கருவி விற்பனைக்கு வந்தது.
1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகத்து 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
1949 – கொச்சி, திருவிதாங்கூர் சமத்தானங்கள் திருவாங்கூர்-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (பின்னைய கேரளம்) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொச்சி இராச்சியம் முடிவுக்கு வந்தது.
1997 – ஆங்காங்கின் அதிகாரத்தை சீனா பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் குடியேற்றவாத அரசு முடிவுக்கு வந்தது.
2004 – காசினி-இயூஜென்சு (படம்) விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.