Today’s Important Historical Events ~July 3, 2021~ வரலாற்றில் இன்றைய நாள்
Today’s Important Historical Events ~Jul 3, 2021~ வரலாற்றில் இன்றைய நாள்
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவில் பிரித்தானிய இராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொன்றனர்.
1844 – ஐசுலாந்தில் கடைசிச் சோடி பெரிய ஆக்கு (படம்) பறவைகள் கொல்லப்பட்டன.
1872 – யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் வட்டுக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் பிடியில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள் சிக்குவதைத் தடுக்க ஜிப்ரால்ட்டரில் இருந்து புறப்பட்ட பிரித்தானியப் போர்க் கப்பல்களால் தாக்கப்பட்டதில் பிரான்சின் மூன்று கப்பல்கள் 1200 கடற்படையினருடன் மூழ்கின.
1944 – இரண்டாம் உலகப் போர்: பெலருசின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் செஞ்சேனைப் படையினரால் நாட்சி செருமனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1988 – அமெரிக்கப் போர்க்கப்பல் வின்செனசு பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.