Historical Events

Today’s Important Historical Events ~ July 4, 2021~ வரலாற்றில் இன்றைய நாள்

July 4: ஐக்கிய அமெரிக்கா – விடுதலை நாள் Independence Day (United States)

1803 – லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட செய்தி அமெரிக்க மக்களுக்கு அறிவிக்கப்படட்து.
1826 – அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் தாமசு ஜெஃபர்சன், 2ம் அரசுத்தலைவர் ஜான் ஆடம்ஸ் இறந்த அதே நாளில் இறந்தார். இதே நாளிலேயே அமெரிக்க விடுதலைச் சாற்றுரை 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக்கொளப்பட்டது.
1837 – உலகின் முதலாவது அதி-தூர தொடர்வண்டிப் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.
1902 – இந்தியாவின் சமயத் தலைவர் சுவாமி விவேகானந்தர் (படம்) இறப்பு.
1946 – 381 ஆண்டு கால குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பீன்சு ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1947 – பிரித்தானிய இந்தியாவை இந்தியா, பாக்கித்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் முன்வைக்கப்பட்டது.
1951 – வில்லியம் ஷாக்லி திரான்சிஸ்டரைத் தாம் கண்டுபிடித்ததாக அறிவித்தார்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!