Today’s Important Historical Events ~July 5, 2021~ வரலாற்றில் இன்றைய நாள்
1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீசப் படையினர் பேரோ லொபேஸ் டி சூசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர்.
1687 – ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை (படம்) வெளியிட்டார்.
1950 – சியோனிசம்: யூதர்கள் அனைவரும் இசுரேலில் குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இசுரேலில் கொண்டுவரப்பட்டது.
1977 – பாக்கித்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார்.
1987 – ஈழப் போர்: விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் மில்லரினால் யாழ்ப்பாணம், நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
2016 – யூனோ விண்கலம் வியாழன் கோளை அடைந்து தனது 20-மாத ஆய்வை அக்கோளில் ஆரம்பித்தது.