Historical Events

Todays Important Historical Events~18 June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்

Todays Important Historical Events~18June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்

1815 – நெப்போலியப் போர்கள்: வாட்டர்லூ சமரில் நெப்போலியன் பொனபார்ட் வெல்லிங்டன் பிரபுவினால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நெப்போலியன் பிரான்சின் அரசாட்சியை இரண்டாம் தடவையாகவும், இறுதியாகவும் இழந்தான்.
1858 – சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய முடிவுகளுக்கு ஒப்பான ஆய்வு அறிக்கைகளை ஆல்ஃவிரடு அரசல் வாலேசுவிடம் இருந்து பெற்றார். இதனை அடுத்து டார்வின் தனது ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டி வந்தது.
1928 – வானோடி அமேலியா ஏர்ஃகாட் அத்திலாந்திக்குப் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1946 – சமூகவுடைமைவாதி ராம் மனோகர் லோகியா போத்துக்கீசருக்கு எதிராக கோவாவில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
1953 – 1952 எகிப்தியப் புரட்சி முடிவுக்கு வந்தது. முகமது அலி வம்சம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு எகிப்து குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1983 – சாலஞ்சர் விண்ணோடம்: சாலி றைட் (படம்) விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!