TORONTO-GTA-பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் வாகனப்பேரணி
இலங்கையின் அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் p2p க்கு வலுச்சேர்க்கும் மாபெரும் வாகனப் பேரணி
கனடிய மண்ணில் பெப்ரவரி 7-02-2021 திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு மாபெரும் கண்டன வாகனப் பேரணி நடைபெறவுள்ளது. தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இடம் பெறும் இனவழிப்பை நிறுத்தவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” சிறிலங்காவின் அதியுச்ச அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் வாகனப்பேரணி
பேரணி ஆரம்பிக்கும் இடங்கள்
மார்க்கம்/ ஸ்ரில் மதியம்12 மணி-Markham & Steeles
பிரம்ரன் மதியம் 12 மணி-Brampton Shoppers World
மிஸ்ஸிஸசாகா மதியம் 12 மணி-Mississauga City Centre
அஜக்ஸ் நியூ ஸ்பசிலாண்ட் மதியம் 12 மணி-Ajax New Spiceland Supermarket