கனேடிய நாடாளுமன்றம் Ottawa நோக்கிய வாகனப் பேரணி
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாக கனடா இருப்பதனால் தமிழ் மக்கள் சார்ந்து முடிவுகளை எடுப்பதற்கான தார்மீகக் கடமை கனடாவிற்கு இருக்கிறது என்பதை வலியுறுத்தியே இந்த வாகனப் பேரணி இடம்பெற இருக்கிறது.
ஐனவரி 27 அன்று வெளிவந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பரிந்துரைகளை இணைத்தலைமை நாடுகளுடாக தீர்மானம் ஒன்றில் வரைவாக கொண்டுவருமாறு கனேடிய அரசை கனேடியத் தமிழர் சமூகம் வலியுறுத்தி நிற்கிறது.
காலம்: நாளை, பெப்ரவரி 17, 2021
ரொறன்ரோவிலிருந்து காலை 8 மணிக்கு வாகனப் பேரணி ஆரம்பமாகும்.
மொன்றியலிலிருந்து காலை 10:30 மணிக்கு வாகனப் பேரணி ஆரம்பமாகும்.
தொடர்புகளுக்கு:
மகாஜெயம் – 647-262-5587
மரியராசா – 416-669-6437
றெஜி (மொன்றியல்) – 514-651-1419
றோய் – 416-457-1633