Historical EventsNationNews

அணுவிஞ்ஞானி கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை-புத்தக வெளியீட்டு விழா

Getting your Trinity Audio player ready...
கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை அவர்களின் சுயசரிதம் - அணுவைத்துளைத்து புத்தக வெளியீடு May 28, 2023 at 500 pm Scarborough Convention Centre 20 Torham Pl, Scarborough, ON M1X 0B3

அணுவிஞ்ஞானி கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை அவர்கள் சுயசரிதை வடிவில் எழுதியிருக்கும் “அணுவைத் துளைத்து” என்ற நூல் 28-05-2023 அன்று மிகச் சிறப்பாக வெளியீட்டு விழா கண்டது. ஸ்காபரோ கொன்வென்சன் சென்டரில் நடந்த இந்த வெளியீட்டு விழாவில் கனடியப் பாராளுமன்ற உறுப்பினரான கேரி ஆனந்த சங்கரி கலந்து கொண்டு சிறப்பு உரை வெளியீட்டு விழாவில் கனடியப் பாராளுமன்ற உறுப்பினரான கேரி ஆனந்த சங்கரி கலந்து கொண்டு சிறப்பு உரை நிகழ்த்திச் சென்றார்.

Video : ttjcanada.com

எழுத்தாளர் இணைய முன்னாள் தலைவரான சின்னையா சிவநேசன் அவர்கள் தலைமையுரையை நிகழ்த்தியதைத் தொடர்ந்து பேராசிரியர் வண. ஜோசப் சந்திரகாந்தன் அடிகளார் வெளியீட்டுரையை நடத்தினார். நூல் குறித்த ஆய்வரையை பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி தந்தார். தொடர்ந்து பல்வேறு ஊடகவியலாளர்களும், சமூக சேவையாளர்களும் கலாநிதி இலகுப்பிள்ளையின் பல்வேறு சாதனைகளை குறிப்பிட்டுப் பேசினர்.

ஈழத்தமிழ் கனடியரான கலாநிதி இலகுப்பிள்ளை அவர்கள் கல்விமானாக மட்டுமன்றி கனடாவில் தமிழ் சமூகத்தின் அரசியல் செயல்பாட்டாளராகவும் ஒரு காலப்பகுதியில் நன்கு அறியப்பட்டவர். குறிப்பாக 2009 ல் தமிழர் உரிமை ஆயுதப்போர் தற்காலிக ஓய்விற்கு வருமுன்னர் தமிழர் உரிமை குறித்த அவரது சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகள் கனடாவில் மட்டுமல்ல ஈழத்திலும் ஆழ வேரூன்றியிருந்ததையும் பலரும் அறிவார்கள். அதன் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகளின் தலைவரின் அனுமதியுடன் கனடிய அரசியலில் தேர்தல்மூலம் தனது சேவையை தொடர ரீஜனல் கவுன்ஸிலராக போட்டியிட முன்வந்த அவருக்கு அன்றைய உலகத்தமிழர் இயக்கத்தின் செயல்பாட்டாளர்கள் சிலரே ஆப்பு வைத்ததை ஒலிபரப்பாளர் இளைய பாரதி மேடையில் சொல்லி வேதனைப்பட்டார்.

மேலும் கலாநிதி இலகுப்பிள்ளையின் சகோதரியும், ஓய்வுநிலை சிரேஷ்ட விஞ்ஞானியுமான திருமதி வரதலட்சுமி கோவிந்தபிள்ளை அவர்கள் தனது சகோதரனின் இளமைக்காலம் குறித்து உணர்ச்சி ததும்பும் உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். ஈற்றில் நூலாசிரியரான கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளையின் ஏற்புரையுடன் “அணுவைத் துளைத்து..” நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைவேறியது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!