NationNewsWorld

உலக பத்திரிகை சுதந்திர நாள் 2024 World Press Freedom Day

World Press Freedom Day Conference 2024Live

The opening will be followed by a first plenary session (10.15am – 11.20am GMT-4) under the theme “No Future without Freedom of Expression and access to information”, with the participation of Maria Ressa, co-founder and CEO of Rappler, Philippines, Fredrick Mugira, Founder Water Journalist Africa, Uganda, Minna-Liina Lind, Deputy Foreign Minister for Global Affairs and Co-chair of the Media Freedom Coalition, Estonia and Gael García Bernal, Actor, producer and environmental activist, moderated by Paloma Ávila Barrera, Director of CNN Futuro, Chile At 1.30pm – 2.45pm will take place the Plenary Session II: “The threats to our future”, with the participation of Andrea Ixchiu, K’iche journalist and environmental activist, Guatemala, Alyaa Abo, Investigative journalist and trainer, Egypt, Jennifer Robinson, Doughty Street Chambers, human rights and freedom of expression lawyer, Australia, Ricardo Pael Ardenghi, Prosecutor, Procuradoria da Republica Em Mato Grosso, Brazil, Suntariya Muanpawong, Chief Judge in the Research Justice Division of the Supreme Court of Thailand, Thailand. Finally, Plenary Session III : “Facing a future for all” will take place at 5pm-6.10pm, with the participation of Irene Khan, UN Special Rapporteur on the promotion and protection of the right to freedom of opinion and expression, Emma Theofelus, Minister of Information and Communication Technology, Namibia, Giovanni Salvi, Former Attorney General of the Italian Court of Cassation, Italy, Maksuda Aziz, Journalist at Mongabay, Association of Bangladeshi Journalists, Bangladesh, Antonio Díaz Aranda, Youth Ambassador for Climate and will be moderated by Mr. Giles Trendle, Co-Chair the steering committee of Covering Climate Now, UK.

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே “பத்திரிகை சுதந்திர சாசனம்” (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,’உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை’ என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.

இந்நாள் அன்று, உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!