ArticlesNationNews

செயற்கை நுண்ணறிவுத் – Artificial intelligence

Getting your Trinity Audio player ready...

ChatGPT : டிஜிட்டல் யுகத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் அணுகலை மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவுக் கருவி

சமீபத்திய ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவுத் (artificial intelligence) துறையில், குறிப்பாக இயற்கை மொழி முறையாக்கத்தில் (natural language processing) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இத்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, 2022ம் ஆண்டின் இறுதியில் வந்து இப்போது இணைய உலகை கலக்கிக்கொண்டு இருக்கும் OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த மொழி மாதிரியான (language model), ChatGPT ஐ கூறமுடியும். GPT-3.5 தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட ChatGPT, கணினிகளை மனிதனைப் போன்றே உரையாடல்களில் ஈடுபடுத்துவதுடன், பல்வேறு பயன்பாடுகளுக்கு புதிய கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. இச் ChatGPT ஊடாக எவரொருவரும் ஒரு கணக்கை (user account) உருவாக்கி உரையாடல் நிகழ்த்திட முடியும். மனிதர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் அவர்கள் ஏற்கனவே கேட்ட கேள்விகள் ஆகியவற்றை நினைவில் வைத்து உரையாடல்களை நிகழ்த்தும் விதத்தில் தான் இச் ChatGPT வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஒரு மென்பொருட் பொறியியலாளர், தான் உருவாக்கிய மென்பொருள்நிரலில் உள்ள தவறை சரி செய்திட இச் ChatGPT யிடம் உதவி கேட்கலாம். ஒரு மாணவர் ஏதேனும் ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை எழுத சொன்னால் ChatGPT எழுதித்தரும். ஒரு ஆசிரியருக்கு வினாப்பத்திரங்களைத் தயாரிக்க உதவும். இதுபோன்ற ஏராளமான உதவிகளை ChatGPT யிடம் பெறலாம். நீங்கள் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும் உலகிற்கு புதியவர் எனில், ChatGPT ஐப் புரிந்துகொள்வதற்கும் ஆய்ந்தறிவதற்கும் இக் கட்டுரை ஒரு முன் வழிகாட்டியாகச் செயற்படும்.

இக் கட்டுரையின் உள்ளடக்கம்

  1. ChatGPT என்றால் என்ன? ஓர் அறிமுகம்.
  2. ChatGPT எவ்வாறு இயங்குகிறது?
  3. ChatGPT இன் பயன்பாடுகள்
  4. ChatGPT ஐ வினைத்திறனாக பயன்படுத்துதல்
  5. ChatGPT ஐ பயன்படுத்துவதில் வரையறைகள்
  6. GPT-4 என்றால் என்ன?
  7. ChatGPTக்கான மாற்றீட்டுச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்
  8. ChatGPT எதிர் Bard
  9. ChatGPT உடன் தொடர்புடைய நெறிமுறைசார் விடயங்கள்
  10. முடிவுரை.

1.ChatGPT என்றால் என்ன? ஓர் அறிமுகம்

வளர்ந்து வரும் நவீன உலகத்தில் பல்வகையான நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில், அவற்றிலேற்படும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உடனடித் தீர்வு அவசியமாக உள்ளது. ஏற்கனவே தொழில்துறையில் பயன்படுத்தப்பட்டுவரும் அரட்டை இயலி (Chatbot) இச் சிக்கலுக்குத் தீர்வு தரக்கூடியதாக இல்லை. இதனால் ஏற்படும் இழப்பை இவ் OpenAI ChatGPT சரிசெய்யக்கூடியதாக உள்ளது. இத் தீர்வை கண்டுபிடிப்பதற்கான அடித்தளத்தை முதலில் அமைத்தது OpenAI நிறுவனம்தான். இது 2015 ஆம் ஆண்டுவாக்கில் சான் பிரான்ஸிஸ்கோவில் சாம் அல்ட்மன், எலன் மஸ்க் மற்றும் சிலரால் உருவாக்கப்பட்ட ஒரு இலாபநோக்கமற்ற நிறுவனமாகும். (2018 ஆம் ஆண்டில் நிர்வாகப்பொறுப்பில் இருந்து மஸ்க் வெளியேறிவிட்டார்.) மைக்ரோசொப்ட் நிறுவனமும் ஏராளமான நிதியினை இந் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழங்கியுள்ளது.

ChatGPT என்பதன் ஆங்கில விரிவாக்கம் Generative Pre-trained Transformer என்பதாகும். OpenAI என்கிற நிறுவனத்தால் நவம்பர் மாதம், 2022 ஆம் ஆண்டு, உரையை (text) உருவாக்குவதற்கும் பயனர்களுடன் அர்த்தமுள்ள உரையாடல்களில் (meaningful chats) ஈடுபடுவதற்குமென வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட மொழி மாதிரியே (advanced language model) இதுவாகும். இது இணையத்திலுள்ள ஏராளமான தரவுகளைக் கொண்டு, மனிதனைப் போன்றே பதில்களை உருவாக்கவும் புரிந்துகொள்ளவும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு உதவிகள் தேவைப்படும்போதும், சிந்தனையைத் தூண்ட விரும்பும்போதும் அல்லது சாதாரண உரையாடலில் ஈடுபட விரும்பினாலும், தான் பெறும் உள்ளீட்டின் அடிப்படையில் புத்திசாலித்தனமான பதில்களை வழங்குவதற்கு ChatGPT தயாராகவே இருக்கும். இதனால் இச்ChatGPT தன்னகத்தே 1 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை சிறிய காலத்திற்குள்ளேயே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2.ChatGPT எவ்வாறு இயங்குகிறது?

ChatGPT ஆனது மிகமுக்கியமாக ட்ரான்ஸ்போமர் மொடல் (Transformer model) எனப்படும் ஆழமான கற்றல் நுட்பத்தை நம்பியுள்ளது. இம் மாதிரியானது செயற்கை நரம்பணுப் பிணையத்தைப் (Artificial neural network) பயன்படுத்தி உரைத் தரவை திறம்பட முறைவழியாக்கி புரிந்துகொள்ள உதவுகிறது. ChatGPT  மேற்பார்வையற்ற கற்றல் (unsupervised learning) எனப்படும் செயல்முறையின் மூலம், முந்தைய சொற்களின் அமைப்பின் அடிப்படையில் ஒரு வாக்கியத்தில் அடுத்த வார்த்தையைக் கணிக்கிறது. இச் செயல்முறையானது மொழியின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு ஒத்திசைவான பதில்களை உருவாக்க உதவுகிறது.

ChatGPT புரொம்ப்ட் என்ஜீனீரிங்க் (Prompt engineering) எனப்படும் நுட்பத்திலிருந்தும் பயனடைகிறது. பயனர்களால் வழங்கப்படும் தொடக்கத் தூண்டுதல் (starting prompt) அல்லது அறிவுறுத்தல்கள் பொருத்தமான பதிலை நோக்கி வழிகாட்டுகின்றன. தொடக்கத் தூண்டுதல் பயனரின் வினவல் அல்லது கூற்றினைப் புரிந்துகொள்ளவும் பொருத்தமான பதிலை உருவாக்கவும் அனுமதிக்கிறது. மொழி வடிவங்கள் (language patterns) பற்றிய புரொம்ப்ட் மற்றும் அதன் அடிப்படையான புரிதலின் விளைவாக வருவிளைவு கிடைக்கின்றது.

மிகவும் சாதாரணமாக சொல்லவேண்டும் என்றால், கேள்விகள் என்ன விதத்தில் கேட்கப்படுகிறது என்பதை புரிந்துகொண்டு அதே விதத்தில் பதில் சொல்லும் விதத்தில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் ChatGPT.

3. ChatGPT இன் பயன்பாடுகள்

ChatGPT இன் பல்துறைத்திறமை அதனை பல்வேறு தளங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது.

3.1. வாடிக்கையாளருக்கு உதவுதல்:

பொதுவான வினவல்களுக்குப் பதிலளிப்பதன் மூலம், கணக்கீடுகளைத் தீர்த்தல் மூலம், சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலம் அல்லது பிழைகாணல் செயல்முறைகளால் பயனர்களுக்கு வழிகாட்டுவதன் மூலம் ChatGPT ஆனது தானியங்கி வாடிக்கையாளர் சேவையை (automated customer service) வழங்க முடியும்.

3.2. உள்ளடக்கத்தை உருவாக்குதல்:

கட்டுரைகள் அல்லது ஆக்கங்கள், மின்னஞ்சல், கணணி நிரலாக்கம், சமுக வலைத்தள பதிவுகள் எதுவாக இருப்பினும், வழங்கப்பட்ட தூண்டுதல்களின் (prompts) அடிப்படையில் உரை உள்ளடக்கத்தை உருவாக்க ChatGPT உதவும். வாக்கியங்கள் அல்லது பத்திகளை உருவாக்க ChatGPT பயன்படுத்தப்படலாம், பயனர்கள் மிகவும் திறமையாகவும் துல்லியமாகவும் எழுத உதவுகிறது. ChatGPT ஆனது கட்டுரைகள், கதைகள் என பலவற்றை உருவாக்க பயன்படுகிறது. கட்டுரைகள் உருவாக்குபவர்களுக்கு நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துகிறது. ChatGPT ஐ நீண்ட உரையை சுருக்கமாக்கப் பயன்படுத்தலாம். இதனால் பயனர்கள் செய்தியின் முக்கியப் புள்ளிகளை விரைவாகப் புரிந்துகொள்ள முடியும்.

3.3. மொழியை கற்றல்:

ChatGPT ஆனது உரையாடல் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலமும், கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமும் பல்வேறு மொழிகளை கற்பவர்களுக்கு விளக்கங்களை வழங்கலாம். ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உரையை மொழிபெயர்க்க ChatGPTஐப் பயன்படுத்தலாம். பயனர்கள் வெவ்வேறு மொழிகளில் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதை எளிதாக்குகிறது.

3.4. சிந்தனைத் தூண்டல்:

நீங்கள் புதிய சிந்தனைகள் அல்லது ஆக்கபூர்வமான உதவியைத் தேடுவீர்களாயின், ChatGPTயால் பரிந்துரைகள் மற்றும் மாற்றுக் கண்ணோட்டங்களை வழங்க முடியும்.

3.5. தனிப்பட்ட உதவிகள்:

இயல்பான உங்களது மொழியைப் புரிந்துகொள்ளும் திறன்கொண்ட ChatGPTயால் தனிப்பட்ட உதவிகளை வழங்க முடியும். ChatGPT ஒரு மிகச்சிறந்த அரட்டை இயலிகளில் (chatbot) ஒன்று. மனிதர்களின் மொழி நடையிலேயே கேள்விகளுக்கு பதில் தரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

4.ChatGPT வினைத்திறனாக பயன்படுத்துதல்

4.1.ChatGPTயை வினைத்திறனாக பயன்படுத்தும்போது, சில சிறந்த நடைமுறைகளை மனதில் கொள்ள வேண்டும்.

4.1.1. தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குங்கள்:

உங்கள் வினவலை அல்லது கோரிக்கையை தெளிவாகக் குறிப்பிடவும். நீங்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறீர்களோ, பதில் அந்தளவு மிகவும் துல்லியமாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்.

4.1.2. வெவ்வேறு சொற்றொடர்களைக் கொண்டு பரிசோதனை செய்யுங்கள்:

முதலில் நீங்கள் விரும்பிய பதிலைப் பெறவில்லை எனில், உங்கள் கட்டளையை மீண்டும் எழுத அல்லது தெளிவுபடுத்த முயற்சிக்கவும். ChatGPT சில நேரங்களில் சொற்களில் நுட்பமான மாற்றங்களுக்கு உணர்திறன் உடையதாக இருக்கலாம்.

4.1.3. முறைமைசார் வழிமுறைகளைப் பயன்படுத்தவும்:

உங்கள் உரையாடலின் தொடக்கத்தில் முறைமைசார் அறிவுறுத்தலைச் சேர்ப்பதன் மூலம், ChatGPTயின் நடத்தைக்கு நீங்கள் வழிகாட்டலாம். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட எழுத்து பாணியைப் பின்பற்றும்படி நீங்கள் அதைக் கேட்கலாம்.

4.1.4. பதில்களை விமர்சன ரீதியாக மதிப்பிடுங்கள்:

ChatGPT ஆனது உதவிகரமான மற்றும் பக்கச்சார்பற்ற பதில்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டாலும், சில சமயங்களில் அது பயிற்சியளிக்கப்பட்ட தரவுகளில் இருக்கும் சார்புகளைப் பிரதிபலிக்கும். மாதிரி வழங்கிய தகவலை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்து சரிபார்க்க வேண்டியது அவசியம். ChatGPT யால் தகவல் மற்றும் பரிந்துரைகளை வழங்க முடியுமென்றாலும், முக்கியமான தலைப்புகளுக்குப் பல ஆதாரங்களைச் சரிபார்த்து ஆலோசிப்பது எப்போதும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4.1.5. உரையாடல்களை சுருக்கமாக வைத்திருங்கள்:

பதிலளிப்பு நீளத்தின் வரம்புகள் காரணமாக, ChatGPT உடனான உங்கள் உரையாடல்களை சுருக்கமாகவும் ஒருமுகப்படுத்தியும் வைத்திருப்பது நல்லது. உங்களிடம் சிக்கலான கேள்வி அல்லது தலைப்பு இருந்தால், அதை சிறிய, மேலும் நிர்வகிக்கக்கூடிய பகுதிகளாக உடைப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

4.2.ChatGPT உடன் உரையாடலைத் தொடங்குதல்

4.2.1. chat.OpenAi.com க்குச் சென்று, மின்னஞ்சல் முகவரி அல்லது Google அல்லது Microsoft கணக்குடன் உள்நுழைய OpenAI இணையதளத்தில் ஒரு கணக்கை உருவாக்கவும். இது இலவசம்.

நீங்கள் இதற்கு முன் ஒரு கணக்கை உருவாக்கவில்லை என்றால், ‘Sign up’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் தகவலை உள்ளிடுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும். OpenAI க்கு அதன் இணையதளத்தில் கணக்கை உருவாக்கி சரிபார்க்க சரியான தொலைபேசி எண் தேவைப்படுகிறது.

4.2.2.அடுத்து, நீங்கள் உரையாடலைத் தொடங்கும்முன் சில நிபந்தனைகள் வருவதைக் காண்பீர்கள். அவற்றைப் படித்து ஒவ்வொன்றாக ஏற்றுக்கொள்ளவும்.

4.2.3.பக்கத்தின் கீழே உள்ள உரைப் பெட்டியில் தட்டச்சிடத் தொடங்குங்கள். பின்னர், உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க Enter ஐ அழுத்தவும்.

5.ChatGPT பயன்படுத்துவதில் வரையறைகள்

ChatGPT மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டாலும் கூட ChatGPT ஐ பயன்படுத்துவதில் சில வரையறைகளும் உள்ளன:

5.1. மனித மொழியின் சிக்கலான தன்மையை ChatGPT இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

உள்ளீட்டின் அடிப்படையில் வார்த்தைகளை உருவாக்க ChatGPT பயிற்சியளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பதில்கள் மேலோட்டமானதாகவும், அறிவற்றதாகவும் தோன்றலாம்.

5.2. 2021க்குப் பிந்திய தரவுகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய அறிவு இல்லாதது.

பயிற்சித் தரவுகளானது 2021 உள்ளடக்கத்துடன் முடிவடைகிறது. இதனால் ChatGPT ஆனது பிந்திய நிகழ்வுகளின் அடிப்படையிலான கேள்விகளுக்கு தவறான தகவலை வழங்க முடியும். ChatGPT ஆனது வினவலை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றால், அது தவறான பதிலையும் வழங்கலாம். ChatGPT க்கு இன்னும் பயிற்சியளிக்கப்படுகிறது. எனவே பதில் தவறாக இருக்கும் போது பின்னூட்டமிடுதல் பரிந்துரைக்கப்படுகிறது.

5.3. மறுமொழிகள் இயந்திரத் தன்மையானதாகவும் இயற்கைக்கு மாறானதாகவும் இருக்கலாம்.

ChatGPT அடுத்த வார்த்தையைக் கணிப்பதால், ‘the,and’ போன்ற சொற்களை அது அதிகமாகப் பயன்படுத்தக்கூடும். இதன் காரணமாக, மனிதர்கள் எழுதுவதைப் போலவே, உள்ளடக்கத்தை இன்னும் இயல்பாக்குவதற்கு, நீங்கள் மேலும் மதிப்பாய்வு செய்து திருத்த வேண்டும்.

5.4. இது சுருக்கமாகக் கூறுகிறது, ஆனால் ஆதாரங்களை மேற்கோள் காட்டவில்லை.

ChatGPT புள்ளிவிவரங்கள் பற்றிய பகுப்பாய்வுகளை வழங்குவதில்லை. அதாவது ChatGPT பல புள்ளிவிவரங்களை வழங்கலாம், ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் எதைக் குறிக்கின்றன அல்லது அவை தலைப்புடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பது பற்றி வர்ணிப்பதில்லை.

5.5. கிண்டல் மற்றும் கேலிகளை அதனால் புரிந்துகொள்ள முடியாது.

ChatGPT ஆனது உரையின் தரவுத் தொகுப்பின் (data set of text) அடிப்படையில் அமைந்துள்ளது.

5.6. இது ஒரு கேள்வியில் மட்டும் கவனம் செலுத்தலாம்.

உதாரணமாக, நீங்கள் செல்லப்பிராணியை பற்றியும் பூனையை பற்றியும் ChatGPT ஐக் கேட்டால், ChatGPT ஆனது செல்லப் பிராணியைப் பற்றிய தகவல்களை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடும்.

5.7. ஆங்கிலம், ஸ்பனிஷ், பிரெஞ், ஜெர்மன், இத்தாலியன் மற்றும் சீன மொழி மற்றும் இன்னும் ஒரு சில மொழிகள் உள்ளிட்ட மொழிகளை இதனால் புரிந்துகொண்டு பதில் தர முடியும். இவற்றை தவிர்த்த பிற மொழிகளில் பதில் தர முடியாது. ChatGPT தமிழில் உரையைப் புரிந்துகொண்டு மறுமொழியை உருவாக்க முடியும். இருப்பினும், ChatGPTக்கு தமிழில் அதன் புலமை மற்றும் துல்லியம் குறைவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பான்மையாக, ஆங்கிலத்தில் மட்டுமே அதிக தகவல்களை கொண்டிருக்கும்.

6.  GPT-4   என்றால் என்ன?

GPT-4 என்பது OpenAI இன் மொழி மாதிரி முறைமைகளின் (language model systems) புதிய பதிப்பாகும். GPT-4 ஆனது ChatGPT ஐ அறிமுகப்படுத்திய சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு OpenAI ஆல் மார்ச் 14, 2023 அன்று வெளியிடப்பட்டது.

GPT-4 ஒரு மகா மல்டிமொடல்  மாதிரியாக (multimodal model) இருப்பதால், இது உரை மற்றும் பட உள்ளீடுகள் (text & image) இரண்டையும் ஏற்கும். எடுத்துக்காட்டாக, GPT-4 இல், நீங்கள் ஒரு பணித்தாளை (worksheet) பதிவேற்றி அதை வருடி (scan) கேள்விகளுக்கான பதில்களை பெற முடியும். மேலும் நீங்கள் பதிவேற்றும் வரைபுகளை (graph) படித்து வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கணக்கீடுகளைச் செய்ய முடியும். இம் மாதிரியில் GPT-3.5 ஐ விட சிறப்பாக அறிவுசார் திறன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

OpenAI இன்னும் GPT-4 இன் காட்சி உள்ளீட்டு திறன்களை (visual input capabilities) எந்த தளத்திலும் கிடைக்கச் செய்யவில்லை. இருப்பினும், GPT-4 இன் உரை உள்ளீட்டு திறனை (text input capability) அணுக வழிகள் உள்ளன. OpenAI மூலம் உரை-உள்ளீட்டு திறனை அணுகுவதற்கான ஒரே வழி ChatGPT Plus சந்தாவாகும். இது சந்தாதாரர்களுக்கு மாதத்திற்கு 20 டொலர் விலையில் மொழி மாதிரியை அணுகுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இருப்பினும், இந்த சந்தா மூலம் கூட, நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதை அணுக முடியாமல் போகலாம் என்பது முதலீடு செய்யும் முன் கருத்தில் கொள்ள வேண்டியதொன்று.

GPT-4 இன் உரை திறனை அணுக ஒரு இலவச வழி உள்ளது. அது Bing Chat ஐப் பயன்படுத்துவதன் மூலம் தான்!

7. ChatGPTக்கான மாற்றீட்டுச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்

எது சிறந்த AI அரட்டை இயலி (Chatbot) என்பதை நீங்கள் கண்டறிய முயற்சிக்கும்போது, Google Bard மற்றும் Microsoft இன் Bing Chat போன்றவற்றுடன் OpenAI இன் ChatGPT ஐ ஒப்பிட்டு ஆச்சரியப்படுவீர்கள்.

ChatGPT இன் பிரபலத்தன்மையின் அதிகரிப்புக்கு, உரையாடல்களில் பரந்த அணுகல், அறிவு மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றின் நிபுணத்துவ கலவையே காரணமாக இருக்கலாம்.

ChatGPT உடன் ஒப்பிடும்போது, Bing Chat அதன் தேடுபொறி இயல்பை (search-engine nature) அடிப்படையாகக் கொண்டது. ஏனெனில் அது GPT-4 ஐ இணைத்து இணையத்தில் இருந்து தகவல்களைச் சேகரிக்கிறது. அதன் பதிலைப் பெற்ற வலைப்பக்கங்களுக்கான ஆதாரங்களை மேற்கோள் காட்டுகிறது. Bing Chat இன் பதில்கள் புதுப்பித்த நிலையில் (up to date) உள்ளதுடன் 2021 தரவு மற்றும் நிகழ்வுகளுடன் முடிவடையாது.

ChatGPTக்கு பதிலீடாக கூகுள் Bard ஐ அறிவித்தது. மேலும் புதுப்பிக்கப்பட்ட தகவலை வழங்குவதற்காக Bard ஆனது கூகுள் தேடல் (Google search) மூலம் இணையத்தில் இருந்து நேரடியாக தகவல்களை பெறும்.

பின்வருபவை உட்பட ChatGPT க்கு பிற உரை ஆக்கும் மாற்றீடுகள் (text generator alternatives) உள்ளன:

  • AI-Writer
  • ChatSonic
  • DeepL Write
  • Open Assistant
  • Perplexity AI
  • Rytr
  • YouChat

ChatGPTக்கான நிரலாக்க மாற்றீடுகளில் (Coding alternatives) பின்வருவன அடங்கும்:

  • CodeStarter
  • Amazon CodeWhisperer
  • CodeWP
  • OpenAI Codex
  • GitHub Copilot
  • Tabnine

8. ChatGPT எதிர் Bard

மிகவும் பிரபலமான இரண்டு மகா மல்டிமொடல்  மாதிரிகள் ChatGPT மற்றும் Bard ஆகும். இரண்டும் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், ஆனால் அவை சில முக்கிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.

8.1. தகவல்கள்

ChatGPT மற்றும் Bard ஆகியவற்றுக்கு இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடுகளில் ஒன்று அவை வழங்கும் தகவல்கள். ChatGPT ஆனது 2021 வரையிலான தரவுத்தொகுப்பிலிருந்து பதிலளிக்கிறது, அதே சமயம் Bard ஆனது இணையத்தில் உள்ள நிகழ்கால தகவல்களை உள்ளடக்கிய தரவுத்தொகுப்பிலிருந்து பதிலளிக்கிறது. அதாவது Bard சமீபத்திய ஆய்வுகள் மற்றும் தகவல்களுக்கான அணுகலைப் பெற்றுள்ளது.

8.2. துல்லியம்

ChatGPT க்கும் Bard க்கும் உள்ள மற்றொரு வித்தியாசம் அவற்றின் துல்லியம். மனிதனால் எழுதப்பட்ட உரையைப் போன்ற உரையை உருவாக்குவதில் ChatGPT மிகவும் துல்லியமானது, அதே சமயம் Bard உண்மைத் தகவலுடன் கூடிய உரையை உருவாக்குவதில் மிகவும் துல்லியமாக உள்ளது.

8.3. படைப்பாற்றல்

உண்மையான மற்றும் சுவாரஸ்யமான உரையை உருவாக்குவதில் ChatGPT மிகவும் ஆக்கப்பூர்வமாக உள்ளது, அதே நேரத்தில் Bard தலைப்புக்கு பொருத்தமான உரையை உருவாக்குவதில் மிகவும் ஆக்கப்பூர்வமாக உள்ளது.

8.4. செலவு

Bard தற்போது இலவசமாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், Bard இன்னும் வளர்ச்சியடைய உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், மேலும் எதிர்காலத்தில் அதற்கு கட்டணம் வசூலிக்க கூகுள் முடிவு செய்யலாம்.

ChatGPT இலவசம், இருப்பினும் சில வரம்புகள் உள்ளன. இவ் வரம்புகளை நீக்க விரும்பினால், மாதத்திற்கு 20 டொலருக்கு ChatGPT Plus க்கு சந்தா செலுத்த வேண்டும். இது வரம்பற்ற திறன், முன்னுரிமை, ஆதரவு மற்றும் புதிய அம்சங்களுக்கான ஆரம்ப அணுகல் ஆகியவற்றை உங்களுக்கு வழங்கும்.

உங்களுக்கான சிறந்த மல்டிமொடல்  மாதிரி உங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பொறுத்து அமையும். மனிதனால் எழுதப்பட்ட உரைக்கு ஒத்த ஆக்கப்பூர்வமான உரையை உருவாக்கக்கூடிய ஒரு மாதிரி உங்களுக்குத் தேவைப்பட்டால், ChatGPT ஒரு சிறந்த தேர்வு. சமீபத்திய உண்மைத் தகவலை தரும் உரையை உருவாக்கக்கூடிய மாதிரி உங்களுக்குத் தேவைப்பட்டால், Bard ஒரு நல்ல தேர்வு. இறுதியில், எந்த மாதிரி உங்களுக்குப் பொறுத்தமானது என்பதைத் தீர்மானிப்பதற்கான சிறந்த வழி, இரண்டையும் முயற்சித்து, நீங்கள் விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுதான்!

9. ChatGPT உடன் தொடர்புடைய நெறிமுறைசார் விடயங்கள்

9.1. சிலபணிகளுக்கு ChatGPT உதவியாகஇருக்கும்அதேவேளையில், அதுஎவ்வாறுபயன்படுத்தப்படுகிறதுஎன்பதைப்பொறுத்துசிலநெறிமுறைசார்அக்கறைகள்உள்ளன.

9.1.1.புலமைத் திருட்டு மற்றும் தவறான பயன்பாடு

ChatGPT மனிதனைப்போன்றதிறன்களின்காரணமாகஏமாற்றுதல், ஆள்மாறாட்டம்செய்தல்அல்லதுதவறானதகவல்களைப்பரப்புதல்போன்றவழிகளில்நெறிமுறையற்றமுறையில்பயன்படுத்தப்படலாம். பலகல்வியாளர்கள்மாணவர்கள் ChatGPTயைஏமாற்றவும், புலமைத்திருட்டுசெய்யவும், ஒப்படைகள்எழுதவும்பயன்படுத்துவதைப்பற்றிகவலைகளைஎழுப்பினர். பலபிழைகள்நிறைந்தகட்டுரைகளைஉருவாக்க ChatGPT ஐப்பயன்படுத்தியபோது CNET அதனைசெய்தியாக்கியது.

ஏமாற்றுதல்மற்றும்புலமைத்திருட்டைத்தடுக்க, OpenAI மனிதமற்றும் AI உரையைவேறுபடுத்த AI உரைவகைப்படுத்தியைக் (AI text classifier ) கொண்டுள்ளது. இதனைகண்டறிய Copyleaks அல்லது Writing.com போன்றகூடுதல்நிகழ்நிலைகருவிகளும்உள்ளன. AI-உருவாக்கியஆக்கத்தைஅடையாளம்காணவோட்டமார்க் (Watermark) சேர்க்க OpenAI திட்டமிட்டுள்ளது.

ChatGPT யால்கணனிச்செய்நிரலைஎழுதமுடியுமென்பதால்என்பதால், இதுஇணையப்பாதுகாப்பிற்கும்ஒருசிக்கலைஅளிக்கிறது. தீம்பொருளை (malware) உருவாக்குவதற்கு, அச்சுறுத்தும்நபர்கள் (Threat actors) ChatGPTஐப்பயன்படுத்தலாம்.

ChatGPT க்குஒருவரின்எழுத்துமற்றும்மொழிநடையைநகலெடுக்கபயிற்சியளிப்பதன்மூலம்ஒருநபரைப்போல்ஆள்மாறாட்டம்செய்யமுடியும். முக்கியமானதகவல்களைச்சேகரிக்கஅல்லதுதவறானதகவல்களைப்பரப்புவதற்குநம்பகமானநபரைப்போல்ஆள்மாறாட்டம்செய்யலாம்.

9.1.2. பயிற்சித் தரவுகளில் பக்கச்சார்பு

ChatGPT உடனானமிகப்பெரியநெறிமுறைக்கவலைகளில்ஒன்றுபயிற்சித்தரவில்பக்கச்சார்பிருத்தலாகும். பயிற்சித்தரவுகளில்ஏதேனும்ஒருசார்புஇருந்தால், அதுஅதன்வருவிளைவில்பிரதிபலிக்கும். ChatGPT ஆல்புண்படுத்தக்கூடியஅல்லதுபாரபட்சமாகஇருக்கும்மொழியையும்புரிந்துகொள்ளமுடியாது. பாரபட்சத்தைதவிர்க்கதரவுமதிப்பாய்வுசெய்யப்படவேண்டும்.

9.1.3. மனிதனுக்கு மாற்றீடு

தொழில்நுட்பம்முன்னேறும்போது, தரவுஉள்ளீடுமற்றும்முறைவழிப்படுத்தல், வாடிக்கையாளர்சேவைமற்றும்மொழிபெயர்ப்புஆதரவுபோன்றமனிதர்களால்முடிக்கப்படும்சிலபணிகளை ChatGPT தானியங்குபடுத்தலாம். இதுஅவர்களின்வேலைகளைபிடுங்கிவிடும்என்றுமக்கள்கவலைப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, வழக்குகுறிப்புகள்மற்றும்ஒப்பந்தவரைவுகள்அல்லதுஒப்பந்தங்களின்சுருக்கத்தைஉருவாக்கசட்டத்தரணிகள் ChatGPT ஐப்பயன்படுத்தலாம். மேலும்எழுத்தாளர்கள் கட்டுரையின்சாராம்சம்மற்றும்தலைப்புயோசனைகளுக்கு ChatGPT ஐப்பயன்படுத்தலாம். எனவே ChatGPT மற்றும் AI ஐபயன்படுத்தும்போதுதொழிலாளர்கள்நலன்கள்மீதுஅக்கறைகொள்வதுஅவசியம்.

9.1.4. தனியுரிமைச் (Privacy) சிக்கல்கள்

ChatGPT க்குவழங்கப்படும்உள்ளீட்டில்முக்கியமானதகவல்இருப்பின்வருவிளைவில்அதுவெளிப்படும். இத்தகவல்களைதொகுப்பதன்மூலம்தனிநபர்களைக்கண்காணிக்கலாம்.

9.2.டிஜிட்டல் சட்டங்கள் அறிமுகம்

21 ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் டிஜிட்டல் சட்டங்கள் (Digital Laws) முக்கிய பங்கு வகிக்கின்றன, ஏனெனில் இது மின்னணு பரிவர்த்தனைகளைச் (electronic transactions) செய்வதற்கு தேவையான சட்டச் சூழலை வழங்குகிறது.

மேலும், மின்னணு பரிவர்த்தனைகளின் பயன்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகள் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணினி குற்றவியல் சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென்பது கட்டாயமானதாகும். அதனால் அத்தகைய சட்டங்கள் தொடர்பில் அறிந்துவைத்திருத்தல் நம் ஒவ்வொருவரின் உரிமையும் கடமையுமாகும்.

9.2.1.தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டம் (இல.27 – 2003)

  • தொழில்துறையின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான தேசியக் கொள்கை வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என வழங்குகிறது.

9.2.2.புலமைச் சொத்துரிமைச் சட்டம் (இல.36 – 2003)

  • புலமைச் சொத்து தொடர்பான பதிவு, கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்திற்கான திறமையான நடைமுறைகளை வழங்குவதற்கான ஒரு சட்டம்.

9.2.3.இலத்திரனியல் பரிவர்த்தனைகள் சட்டம் (இல.19 – 2006)

  • ஒப்பந்தங்களை உருவாக்குதல், தரவுச் செய்திகளை உருவாக்குதல் மற்றும் பரிமாற்றம் செய்தல், மின்னணு ஆவணங்கள், மின்னணுப் பதிவுகள் மற்றும் பிற தகவல் தொடர்புத் துறைகளை அங்கீகரித்து எளிதாக்குவதற்கான

மற்றும் ஒரு சான்றுப்படுத்தும் அதிகாரியை நியமனம் செய்தல் மற்றும் சான்றுப்படுத்தும் சேவை வழங்குநர்களின் அங்கீகாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை வழங்குவதற்கான ஒரு சட்டம்.

9.2.4.கணினி குற்றச் சட்டம் (இல. 24 – 2007)

  • கணினி குற்றத்திற்கான அடையாளத்தை வழங்குவதற்கும் மற்றும் விசாரணைக்கான நடைமுறையை வழங்கவும் மற்றும் இத்தகைய குற்றங்களைத் தடுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை வழங்குவதற்குமான ஒரு சட்டம்.

9.2.5.தனிப்பட்டத் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (இல.09 – 2022)

  • தனிப்பட்ட தரவைச் செய்முறைப்படுத்துவதனை ஒழுங்கு படுத்துவதனை ஏற்பாடுசெய்வதற்கும்,

தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல் தொடர்பாகத் தரவுடன் தொடர்பு பட்டோரின் உரிமைகளை அடையாளங்கண்டு பலப்படுத்துவதற்கும்,

தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்,

அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களை ஏற்பாடுசெய்வதற்குமானதொரு சட்டம்.

9.2.6.இணையவெளி  பாதுகாப்புச் சட்ட வரைவு (2019-05-22)

  • இலங்கையின் தேசிய இணையப் பாதுகாப்பை நடைமுறைப்படுத்துவதற்கும்,

இலங்கையின் இணையப் பாதுகாப்பு நிறுவகத்தை நிறுவுவதற்கும்,

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு மற்றும் தேசிய இணையப் பாதுகாப்பு நடவடிக்கை மையத்தின் வலுவூட்டலை வழங்குவதற்கும்,

இலங்கைக்குள் முக்கியமான தகவல் உள்கட்டமைப்பைப் பாதுகாக்க மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை வழங்குவதற்குமான ஒரு சட்டம்.

9.2.7.இலங்கை அரசாங்கத்தின் டிஜிட்டல் சட்டங்கள் மற்றும் கொள்கைகளுடன் தொடர்புடைய ஏனைய சட்டங்கள், ஒழுங்குமுறைகள், சுற்றறிக்கைகள், வழிகாட்டுதல்கள்

  • கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டம், இல. 28 – 2005
  • கொடுப்பனவு சாதனங்கள் மோசடிச் சட்டம், இல.30 – 2006
  • மொபைல் கட்டண வழிகாட்டுதல்கள் 2011_1e
  • மொபைல் கட்டண வழிகாட்டுதல்கள் 2011_2e
  • அரசு நிறுவனங்களுக்கு மின்னணு முறையில் பணம் செலுத்துதல் PF447E
  • அரசு நிறுவனங்களுக்கு மின்னணு முறையில் பணம் செலுத்துதல் 02_2013E
  • உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்கான மின்னணு ஆவணங்கள் மற்றும் மின்னணு தொடர்பாடல்களின் பயன்பாடுசுற்றறிக்கை
  • அரச நடவடிக்கைகளில் பொதுவாக மின்னஞ்சல் & தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் சுற்றறிக்கை

10.முடிவுரை

இத்துடன், இக் கட்டுரையின் முடிவுக்கு வருகிறோம். இக் கட்டுரையிலுள்ள தகவல் உங்களுக்கு பயனுள்ளதாகவும் உற்சாகமளிப்பதாகவும் இருக்குமென நம்புகிறேன். ChatGPT கருவிக்கு பல்வகைத் தராதரங்களில் பல தரப்பட்ட தொழில்சார் அறிவு வழங்கப்பட்டுள்ளது. எனவே இது பயனர்களின் சந்தேகங்களுக்கு பொருத்தமான பதில்களை  எளிதே கொடுத்துவருகின்றது. இருப்பினும் இது மனித ஆற்றலுக்கு மாற்றாகிவிடாது. ஆனால் குறிப்பிடத்தகு தாக்கத்தை இதனால் இணைய உலகில் ஏற்படுத்திவிட முடியும். தகவல்களை துரிதகதியில் வழங்கும் இத் தொழில்நுட்பம் இவ்வுலகை எதிர்காலத்தில் மாற்றியமைக்கும் தன்மையுடையது என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. உணவு, உடை, இருப்பிடம் இவற்றுடன் தொழில்நுட்பமும் தற்போதைய அடிப்படை தேவையாகிவிட்டது. பிறப்பில் இருந்து இறப்பு வரை அறிவியலும், தொழில்நுட்பமும் நம் நிழல் போல கூடவே வருகின்றது. தொழில்நுட்பம் பன்மடங்கு வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளதுடன், இது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ் வளர்ச்சி பல சாதகங்களையும், பாதகங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பினும், மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுத்து தன்னை தகவமைத்துக்கொள்ளும் ஆற்றலற்ற மனிதர் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிடுவர் என்பது உண்மை!

திரு. ராஜேஷ் போஜிதன்

LL.B(R), B.IT, NDT.ICT,

போதனாசிரியர் (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்),

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையம்,

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம் – களுவாஞ்சிக்குடி,

கிழக்கு மாகாணம் – இலங்கை.

உசாத்துணைகள் :

https://openai.com/blog/chatgpt

https://en.wikipedia.org/wiki/ChatGPT

https://en.wikipedia.org/wiki/Chatbot

https://en.wikipedia.org/wiki/Natural_language_processing

https://en.wikipedia.org/wiki/GPT-3#GPT-3.5

https://en.wikipedia.org/wiki/Transformer_(machine_learning_model)

https://en.wikipedia.org/wiki/Artificial_neural_network

https://en.wikipedia.org/wiki/Unsupervised_learning

https://en.wikipedia.org/wiki/Prompt_engineering

https://www.cnet.com/

https://openai.com/blog/new-ai-classifier-for-indicating-ai-written-text

https://en.wikipedia.org/wiki/GPT-4

https://en.wikipedia.org/wiki/Multimodal_learning

https://www.microsoft.com/en-us/edge/features/bing-chat?form=MT00D8

https://en.wikipedia.org/wiki/Bard_(chatbot)

https://writesonic.com/blog/chatgpt-alternatives/

https://semaphoreci.com/blog/chatgpt-alternatives

https://www.icta.lk/

https://www.defence.lk/

https://www.cbsl.gov.lk/

https://www.cert.gov.lk/

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!