Historical EventsNationNews

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக எம்.பி. சிவஞானம் சிறீதரன் தெரிவு

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 72 வருடகால வரலாற்றில் முதல் தடவையாக வாக்கடுத்து தலைவர் தெரிவு. இதன்படி கட்சியின் தலைவராக யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று(21)கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஆரம்பமாகிய நிலையில் தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வாக்கு எண்ணிக்கை (உறுதிப்படுத்தப்படாதது)
சிவஞானம் சிறீதரன் 184
எம்.ஏ.சுமந்திரன் 137

தேர்தல் வாக்களிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் புதிய தலைவர் சிறீதரன் உரையாற்றும் போது தெரிவிக்கையில் எமது மக்களின் உரிமைக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் பொறுப்போடும் கடமையோடும் செயற்படுவேன் அன்று உறுதி அளித்தார்

தலைவர் தெரிவிற்காக போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உரையாற்றும் போது இந்த தேர்தல் மூலம் உட்கட்சி ஜனநாயகம் வெளிக்கொனரப்பட்டுள்ளது. நண்பர் சிறீதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதேவேளை முன்னாள் தலைவர் மாவை சேனாதிபதி ராஜா அவர்களின் தலைமையில் வழிநடாத்தி வந்த இந்த பயணத்தில் தொடர்ந்தும் நாம் ஒன்றாகவே பயணிப்போம் என்று கூறினார்.

இக்கட்சிக்கு கனடா தமிழ் மக்கள் ஆதரவு என்ன நடக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!