NationNews

கனடிய தமிழ் அறிஞரான ஜி.யு.போப்புக்கு PEIல் நினைவுச்சின்னம்

இன்று கனடிய தமிழர் பேரவையால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில்

கனடிய தமிழ் அறிஞரான ஜி.யு.போப்புக்கு PEIல் நினைவுச்சின்னம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இந்த காணொளியில் பார்க்கலாம்

தமிழ் அறிஞரான ஜி.யு.போப்புக்கு நினைவுச் சின்னம் அமைப்பதற்கு கனடியத் தமிழர் பேரவையால் CTC முன்னெடுத்து நடத்துகின்றனர். இதற்கு உங்கள் ஆதரவை வழங்கி வழங்குமாறு அவர்கள் அன்புடன் அழைக்கின்றார்கள்

அன்புடன் தமிழ் 2023″ இசை நிகழ்வுக்கு கனடியத் தமிழர் பேரவை உங்களை அழைக்கிறது. தமிழ் அறிஞரான ஜி.யு.போப்புக்கு, கனடாவின் பிறின்ஸ் எட்வேர்ட் தீவில் (Prince Edward Island -PEI) அமைந்துள்ள பெடெக் என்ற அவர் பிறந்த கிராமத்தில், நினைவுச்சின்னம் ஒன்றினை அமைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சிக்கு உறுதுணையாக, “அன்புடன் தமிழ் 2023” இசை நிகழ்வு நடைபெறுவதைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இசை நிகழ்வு, சிலைத் திறப்பு விழா ஆகிய நிகழ்வுகளில் நீங்கள் பங்கேற்பதன் மூலம் இந்த முன்னெடுப்புக்கான உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். மேலதிக தகவல்களுக்கு மற்றும் “அன்புடன் தமிழ் இசை நிகழ்வு – 2023” க்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள 416-240-0078 / info@canadiantamilcongress.ca ஐத் தொடர்பு கொள்ளவும்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!