NationNews

விஜயகலா மகேஸ்வரனை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

விடுதலைப் புலிகளின் மீள்வருகையை ஆதரித்துப் பேசினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் குழந்தைகள் விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 02, 2018 அன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்போது தமிழ் மக்களின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளின் மீள்வருகை அவசியம் என்ற கருத்தில் திருமதி மகேஸ்வரன் ஆற்றிய உரையைக் காரணம் காட்டி பொலிசார் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.

இதன் விளைவாக அக்டோபர் 8, 2018 இல் அவர் கைது செய்யப்பட்டு அதே நாளில் ரூ.500,000 பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இக்கைதின் போது அவர் ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன் குழந்தைகள் விவகாரத்துக்கான ராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றுமிருந்தார்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!