NationNews

பிரித்தானியா கடமையாக்கப்படும் குடிவரவுச் சட்டம்

கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் தோன்றியுள்ள தீவிர எதிர்ப்பின் காரணமாக வருடா வருடம் பிரித்தானியாவுக்குள் நுழையும் குடிவரவளர்களின் எண்ணிக்கையைப் பல்லாயிரக்கணக்கில் குறைக்கவுள்ளதாக நேற்று (திங்கள்) பிரதமர் ரிஷி சூனாக் அறிவித்துள்ளார்.

புதிய திட்டம் அறிமுகமாகும் பட்சத்தில் சுமார் 300,000 குடிவரவாளர்களின் வரவு பாதிக்கப்படும். தொழில் திறமைகளைக் காரணம் காட்டி நாட்டுக்குள் வரும் விண்ணப்பதாரிகள் பிரித்தானியர்கள் பெறும் சம்பளத்தைவிட அதிக சம்பளத்தை வழங்கும் வேலைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் தொழில் காரணமாக நாட்டிற்குள் வரும் குடிவரவாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு குறைவாக இருக்குமெனக் கூறப்படுகிறது.

பிரித்தானியாவுக்குள் நுழையும் குடிவரவாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் எனவும் அதைக் குறைக்க தான் தீர்மானம் எடுத்திருப்பதாகவும் பிரதமர் சூனாக் அறிவித்திருக்கிறார்.

“பிரித்தானியாவுக்குள் நுழையும் குடிவரவாளர்களின் எண்ணிக்கையைப் பாரதூரமாகக் குறைக்க நாம் முடிவெடுத்துள்ளோம். பிரித்தானியாவின் வரலாற்றிலேயே வேறெந்த பிரதமரும் மேற்கொள்ளாத விடயமிது” என சூனாக் தனது சமூக வலைத்தளப்பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

+குடும்ப உறவினர் வரவின் எண்ணிக்கை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும்
+தொழில் நிமித்தம் குடிவரவுக்கு விண்ணப்பிபவர்களது வேலைகளுக்கான அதிகுறைந்த சம்பளம் 26,200 பிட்டிஷ் பவுண்டுகளிலிருந்து 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்படுகிறது. தமது +உறவினர்களை ஸ்பொன்சர் செய்யும் பிரித்தானிய பிரஜைகளுக்கும் இதே விதி நடைமுறைப்படுத்தப்படும்.
+சுகாதாரப் பணியாளர்கள் தமது உறவினர்களை ஸ்பொன்சர் செய்வதும் வெகுவாகக் கட்டுப்படுத்தப்படும். அதே வேளை பிரித்தானிய சுகாதாரப் பராமரிப்பு ஆணையத்தின் தரப்படுத்தலுக்கு ஏற்ப தமக்குத் தெரிந்த வேறு சுகாதாரப்பணியாளர்களை அவர்கள் ஸ்பொன்சர் செய்யமுடியும்.
+பணியாளர் பற்றாக்குறையுள்ள பணிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 20% சம்பளக்குறைப்புச் சலுகை இனிமேல் அகற்றப்பட்டு குடிவரவு ஆலோசனைக் குழுவின் சமபளப் பட்டியலிந் பிரகாரம் குடிவரவாளர் தகுதி தீர்மானிக்கப்படும்.
பிரித்தானியாவிற்கு கல்வி நிமித்தம் வருபவர்கள் தமது குடும்ப உறவினரை ஸ்பொன்சர் செய்யும் விடயமும் மறுபரிசீலனைக்குள்ளாகிறது. 2023 செப்டம்பர் இறுதி வரையில் 153,000 மாணவர்களின் குடும்ப உறவினர்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது.

செய்தி:மறுமொழி

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!