Historical Events

Todays Important Historical Events ~9 June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்

68 – உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1667 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: மெட்வே மீதான இடச்சுக் கடற்படையின் தாக்குதல் ஆரம்பமானது. அரச கடற்படை வரலாறு காணாத தோல்வி கண்டது.
1762 – பிரித்தானியப் படைகள் அவானா மீதான தாக்குதலை ஆரம்பித்தது. ஏழாண்டுப் போர்க் காலத்தில் நகரைக் கைப்பற்றியது.
1900 – இந்தியத் தேசியவாதி பிர்சா முண்டா (படம்) பிரித்தானிய சிறையில் வாந்திபேதியினால் இறந்தார்.
1903 – அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.
1959 – முதலாவது அணுவாற்றல் ஏவுகணை நீர்மூழ்கி ஜார்ஜ் வாசிங்டன் வெள்ளோட்டம் விடப்பட்டது.
2010 – ஆப்கானித்தான், காந்தகாரில் திருமண வீடொன்றில் சிறுவன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!