NationNews

இன்று தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள்.

திலீபன் (Thileepan) எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (29 நவம்பர் 1963 – 26 செப்டம்பர் 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால மற்றும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர்.இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்த இவர் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அறப் போராட்டத்தின் வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சமயத்திலும், உறுதியுடன் அந்த உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் மரணம் எய்தினார்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!