NationNews

இலங்கை பாராளுமன்றத்தில் சாணக்கியனைத் தாக்க றோஹித அபயகுணவர்த்தனா முயற்சி!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் எப்படி தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்

Sri Lankan MP Rasamanickam அவர் தனது X,com பக்கத்தில் குறிப்பிட்டது
I have alerted the speaker of this incident today. This is not the first time where I have been threatened by SLPP members . The parliament privileges committee has failed to investigate and take action against on previous instances and it has now reached to a point of assault

FB பக்கத்தில் குறிப்பிட்டது

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன என்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார். பாராளுமன்றத்தில் பிரதமர் அவர்களின் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம் என்று கூறி தாக்க முற்பட்டார். இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும்? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே உயிருக்கு உத்தரவாதம் இவ் நாட்டில் இல்லை. எனது சிறப்புரிமை மீறியமைக்காக பாராளுமன்றத்தில் எனது வாக்குமூலம் பதியப்பட்டது.

இலங்கை பாராளுமன்றத்தில் அமைந்திருக்கும் பிரதமரது அலுவலகத்தில் வைத்து தன்னைத் தாக்க முயற்சித்ததாகவும் இது குறித்து சபாநாயகர் விசாரணையொன்றை மேற்கொள்ளவேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு தொகுதி சம்பந்தப்பட்ட விடயமொன்று தொடர்பாக பா.உ. ராசமாணிக்கம் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றபோது “நீ ஏன் இங்கு வந்தாய்? பிரதமர் எங்களுக்கான ஒருவர்” என அபயகுணவர்த்தனா கூறியதாகவும் அதற்கு “பிரதமர் நாட்டுக்குரியவர்” என சாணக்கியன் பதிலளித்தபோது அபயகுணவர்த்தனா அவரைத் தாக்க முற்பட்டார் எனவும் அப்போது அங்கிருந்த ராஜாங்க அமைச்சர் அசோகா பிரியந்த தலையிட்டு அத்தாக்குதல் முயற்சியைத் தடுத்ததாகவும் சாணக்கியன் தெரிவித்திருக்கிறார். இச்சமபவத்தின்போது பா.உ. ஜகத் பிரியங்கரா மற்றும் பிரதமரது அலுவலக ஊழியர்கள் அங்கிருந்தார்கள் என சாணக்கியன் பா.உ. தெரிவித்திருக்கிறார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து “எலிவேட்டருக்குப் பக்கத்தில் வா நான் உன்னைக் கவனிக்கிறேன்” என அபயகுணவர்த்தனா மிரட்டியதாகவும் இச்சம்பவம் பற்றி சபாநாயகர் விசாரணையொன்றை ஆரம்பிக்கவேண்டும் என உதவி சபாநாயகர் அஜித் ராஜபக்சவிடம் ராசமாணிக்கம் கேட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இதுபற்றி அபயகுணவர்த்தனவிடம் பேசி அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அபயகுணவர்த்தனா “பாராளுமன்ற குழுவைச் சந்தித்து விளக்கமளிக்க நான் தயார். “நீ ஏன் பிரதமர் அலுவலகத்திற்கு வந்தாய் என்று மட்டுமே நான் கேட்டேன். அவரைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கவே நான் அவரை எலிவேட்டருகுப் பக்கத்தில் வரும்படி கூறினேன்” எனக் கூறியிருக்கிறார்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!