EntertainmentNationNews

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்-Happy Pongal 2024

பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு மற்றும் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ் மரபுத் திங்கள் கனேடிய பாராளுமன்றத்தால் 2017ல் அங்கீகரிப்பு

கனேடிய பாராளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரிக்கும் எம்-24 முன்மொழிவு அனைத்துக் கட்சிகளினதும் ஏகோபித்த ஆதரவுடன் கனேடிய பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த வருடம் கனடா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட பொங்கல் விழாக்கள் நடந்து கொண்டிருக்கின்றன