NationNews

இலங்கை ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் கொல்லப்பட்டு இன்றோடு 15 வருடங்கள்.

திருமலை மாணவர் ஐவர் படுகொலையை துணிச்சலாக வௌிக்கொணர்ந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் கொல்லப்பட்டு இன்றோடு 15 வருடங்கள்.


எல்லைகளற்ற செய்தியாளர்களின் தகவலின் படி, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களைப் புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறப்படும் தமிழ் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் துணை இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களால் 2006 சனவரி 24 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார் புகைப்படம் ட்விட்டரில் இருந்து எடுக்கப்பட்டது

திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006

திருகோணமலை மாணவர் படுகொலை என்பது 2006 சனவரி 2 ஆம் நாள் இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் ஐந்து இலங்கைத் தமிழ் மாணவர்கள் சிறப்பு இராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டது.
இம்மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த படையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் தமது உயர்தர சோதனையை முடித்து விட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் ஆவர்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:

மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)
யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)
லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)
தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)
சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)

எல்லைகளற்ற செய்தியாளர்களின் தகவலின் படி, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களைப் புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறப்படும் தமிழ் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் துணை இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களால் 2006 சனவரி 26 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!