NationNews

Canada ரொறோண்டோ புதிய கொண்டோமினிய விற்பனை 81% சரிவு!

ரொறோண்டோ பெரும்பாகம் மற்றும் ஹமில்டன் பிரதேச புதிய தொடர்மாடிக் குடியிருப்புகளின் விலை 2024 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. ‘ஏர்பனேசன்’ எனப்படும் நிறுவனத்தின் அறிக்கையின்படி இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டில் மட்டும் அதன் வீழ்ச்சி 81% த்தை எட்டியிருக்கிறது.

இன்று வெளியான இந்த அறிக்கையின்படி கடந்த மூன்றாம் காலாண்டில் மொத்தம் 567 புதிய குடியிருப்புக்களே விற்கப்பட்டுள்ளன எனவும் 1995 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே ஆகக் குறைந்த காலாண்டு விற்பனை எனவும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது. இவ்வருடத்தில், இதுவரை விற்கப்பட்ட புதிய குடியிருப்புகளின் எண்ணிக்கை 3631 எனவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இது 63% வீழ்ச்சி எனவும் இவ்வறிக்கை கூறுகிறது.

கடந்த வருடங்களில் முதலீட்டாளர்களே பெரும்பாலான புதிய குடியிருப்புக்களை வாங்கினார்கள் எனவும் இப்போது அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததோடல்லாமல் தாமே வசிப்பதற்கென குடியிருப்புக்களை வாங்குவோர் பழைய குடியிருப்புக்களை வாங்குவதிலே அதிக நாட்டம் கொண்டுள்ளனர் என்பதானாலும் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகள் வாங்குவோரில்லாமல் சந்தையில் நீண்டநாட்கள் இருக்கவேண்டியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

முதலீட்டுக்கென வாங்குபவர்கள் செய்யும் ஒப்பந்தங்கள் மீதான கட்டுமானங்கள் (pre sale) ஆரம்பிக்க இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பிடிக்கும். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் மொத்தம் 6,796 குடியிருப்புகளைக் கொண்ட 33 புதிய கட்டுமானத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. சந்தை வீழ்ச்சி காரணமாக இப்படியான புதிய கட்டுமானத் திட்டங்களில் 2,231 குடியிருப்புக்களைக் கொண்ட 8 திட்டங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டும், கைவிடப்பட்டும், ஏலத்தில் விற்கவிடப்பட்டுமுள்ளன. 1,111 குடியிருப்புக்களைக் கொண்ட 3 திட்டங்கள் வாடகைக் குடியிருப்புகளாக மாற்றப்பட்டுவிட்டன. சில தற்போதும் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. இதன்படி பார்த்தால் 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 29,409 குடியிருப்புக்கள் கட்டி முடிக்கப்படுமெனவும் இது இவ்வருடத்தின் சாதனையாகவிருக்கும் எனவும் கருதப்படுகிறது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!