Markham மார்க்கம் தைப்பொங்கல் விழா 2026
மார்க்கம் தைப்பொங்கல் விழா 2026 – சமூக ஒற்றுமை மற்றும் தமிழ் பண்பாட்டின் பெருமை வெளிப்பாடு
Markham Thai Pongal Festival 2026 நிகழ்வு, Hon. Logan Kanapathi, MPP அவர்களின் ஒழுங்குபடுத்தலில், Tamil Heritage & Cultural Centre (தமிழ் மரபியல் பண்பாட்டு மையம்) ஏற்பாட்டில், இன்று பிற்பகல் 3.00 மணிக்கு Vedic Cultural Centre வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.











இந்த விழாவின் பிரதம அதிதியாக Hon. Doug Ford, Premier of Ontario அவர்கள் கலந்து கொண்டு, கனடாவின் பன்முக பண்பாட்டுச் சமூகங்களில் தமிழ் சமூகத்தின் பங்களிப்பை பாராட்டினார். தைப்பொங்கல் என்பது நன்றி, உழைப்பு, இயற்கை மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு முக்கியமான தமிழ் பாரம்பரிய விழா என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மேலும், பல Ministers, Members of Provincial Parliament (MPPs), Police Officials, Fire Department representatives, Community Leaders, Volunteers மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். Markham மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வந்த பெருந்திரளான community members கலந்து கொண்டு, விழாவிற்கு மகத்தான ஆதரவு வழங்கினர்.
பொங்கல் வழிபாடு, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், இசை மற்றும் நடன நிகழ்வுகள் மூலம் தமிழ் மரபு, பண்பாடு மற்றும் தலைமுறை தொடர்ச்சி இந்நிகழ்வில் வெளிப்படுத்தப்பட்டது. இளம் தலைமுறையினரும், மூத்தவர்களும் ஒன்றிணைந்து பங்கேற்றது, சமூக ஒற்றுமையின் அழகான வெளிப்பாடாக அமைந்தது.
இந்த தைப்பொங்கல் விழா, தமிழ் சமூகத்தின் பண்பாட்டு அடையாளத்தை வலுப்படுத்துவதோடு, கனடாவின் பன்முக சமூக கட்டமைப்பில் தமிழர்களின் உறுதியான இடத்தை மீண்டும் வலியுறுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.
