LatestNationNews

Pickering – Brooklin MP Juanita Nathanன் ஏற்பாட்டில்-Thai Pongal & Tamil Heritage Month

Pickering—Brooklin, Ontario தொகுதியின் MP Juanita Nathan அவர்களின் ஏற்பாட்டில், Thai Pongal மற்றும் Tamil Heritage Month கொண்டாட்ட நிகழ்ச்சி 31-01-2026 அன்று The Experience Event Centre, 19 Notion Rd இல் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் கூட்டாட்சி, மாகாண மற்றும் நகராட்சி அரசியல் மட்டத்திலான பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும், இலங்கையிலிருந்து வந்த சிறப்பு பிரபலங்களான “எங்கட பெடியள்” குழுவைச் சேர்ந்த வாகீசன், அட்விக், திசோன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்று, கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

இந்த நிகழ்வு, கனடாவில் வாழும் தமிழ் சமூகத்தின் பண்பாட்டு மரபு, ஒற்றுமை மற்றும் சமூக பங்களிப்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான மேடையாக அமைந்தது.