Todays Important Historical Events ~1 June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்
வரலாற்றில் இன்றைய நாள் Todays Important Historical Events
1660 – மேரி டயர் மாசச்சுசெட்சில் குவேக்கர்களைத் தடை செய்யும் சட்டத்தை மீறியமைக்காக தூக்கிலிடப்பட்டார்.
1958 – இனவன்முறைகளில் பாதிக்கப்பட்ட 4,397 தமிழ் அகதிகள் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் காங்கேசன்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
1962 – நாட்சி வதைமுகாம்களை உருவாக்கிய அடோல்வ் ஏச்மென் இசுரேலில் தூக்கிலிடப்பட்டார்.
1979 – 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.
2001 – நேபாள அரசுப் படுகொலைகள்: நேபாளத்தின் முடிக்குரிய இளவரசர் திபெந்திரா தனது தந்தை மன்னர் பிரேந்திரா, தாயார் ஐசுவர்யா உட்பட குடும்பத்தினர் ஏழு பேரை சுட்டுக் கொன்றார்.
2009 – இரியோ டி செனீரோவில் இருந்து பாரிசு சென்று கொண்டிருந்த ஏர் பிரான்சு ஏஎப் 447 விமானம் பிரேசில் கரைக்கப்பால் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 228 பேரும் உயிரிழந்தனர்.
1981 – தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் (படம்) பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.