Historical Events

Todays Important Historical Events ~24 June2021~ வரலாற்றில் இன்றைய நாள்

24 June2021~ வரலாற்றில் இன்றைய நாள்

1314 – இராபர்ட்டு புரூசு தலைமையிலான இசுக்கொட்லாந்துப் படைகள் இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தன. இசுக்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.
1856 – இலங்கையில் புகைப்படக்கலை முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1894 – பிரான்சின் அரசுத்தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ (படம்) இத்தாலிய அரச எதிர்ப்பாளன் ஒருவனால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
1939 – சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது.
1948 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
1950 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்காவில் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
1997 – ஈழப்போர்: பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியில் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!