NationNewsWorld

இன்று ஜூலை 9ஆம் திகதி இலங்கையில் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

GP விக்ரமரத்ன அறிவித்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்றிரவு முதல் அமுல்படுத்த சட்டப்படி அவருக்கு அதிகாரம் இல்லை

ஜனாதிபதி கோட்டாபய உட்பட அரசாங்கத்தை பதவி விலக கோரி இன்று (9) ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஆரம்பம். இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இன்றைய தினம் மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட போவதாக உளவுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே, பாதுகாப்பு உத்தியாக ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டத்தில் பாதுகாப்பு கடமையில் பெருந்திரளான பொலிஸார் உட்பட இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் காணொளியை இலங்கை நேரம் அதிகாலை 1:00 நேரடியாக ஒளிபரப்பப்பட்டது