EntertainmentEvents-நிகழ்வுகள்LatestNationNews

டொரொண்டோ தமிழர் சர்வதேச திரைப்பட 2025 தொடக்க விழா பிரம்மாண்டமாக ஆரம்பம்

இன்று (19) 2025ஆம் ஆண்டிற்கான டொரொண்டோ தமிழர் சர்வதேச திரைப்பட விழா மிகுந்த விமர்சனங்கள், ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக தொடங்கியது. உலகம் முழுவதும் இருந்து வந்த தமிழ் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

More Info: https://www.eventbrite.ca/e/tamil-international-film-festival-movie-lovers-pass-2025-tickets-1489233951839

தொடக்க விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய இசை-நடனங்கள் இடம்பெற்றன. இந்த ஆண்டு விழாவில் தமிழ் திரைப்படங்களோடு மட்டுமல்லாமல், பல்வேறு மொழித் திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

சிறந்த படைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் பல பிரிவுகளுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளன. புதிய தலைமுறை இயக்குநர்களுக்கும், சுயாதீன படைப்பாளிகளுக்கும் மேடை அமைத்துத் தருவது இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும்.

டொரொண்டோவில் வசிக்கும் தமிழ் சமூகத்தினருக்கும், உலகத் தமிழர்களுக்கும் பெருமையை ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு திரைப்பட விழா மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.