2Councillor பதவி இடைத் தேர்தலில் போட்டியிடும் 6 தமிழ் வேட்பாளர்களின் தமிழ்ச் சமூகத்துடனான சந்திப்பு
நேற்று நடந்த (17) இரண்டு Councillor பதவி இடைத் தேர்தலில் போட்டியிடும் 6 தமிழ் வேட்பாளர்களின் தமிழ்ச் சமூகத்துடனான சந்திப்பு
Scarborough-Rouge Park மற்றும் Markham 7ம் வட்டாரம் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில், ஒரே நேரத்தில் பல தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழர் சமூகத்தினருடன் நடத்தப்பட்ட விசேட சந்திப்பில், மொத்தம் ஆறு தமிழ் வேட்பாளர்கள் தாங்கள் ஏன் ஒன்றிணைந்து ஒரே தமிழ் வேட்பாளரை நிறுத்த முடியாமல் போனார்கள் என்பதை விளக்கினர்.
சமூகத்தினரின் கேள்விகளுக்குப் பதிலளித்த வேட்பாளர்கள், ஒவ்வொருவருக்கும் தனித்தனி அரசியல் பார்வை, திட்டங்கள் மற்றும் சமூகத்தின் நலனுக்கான முயற்சிகள் உள்ளன எனக் குறிப்பிட்டனர். அதனால் அனைவரையும் இணைத்து ஒரே நபரைத் தேர்ந்தெடுப்பது சாத்தியமாகவில்லை என்றனர்.
இந்த நிலைமை காரணமாக, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தமிழ் வாக்குகள் பிரிந்து செல்லும் அபாயம் இருப்பதாக சமூகத்தில் அச்சம் நிலவுகிறது. அதேவேளை, வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான ஆதரவை மக்களிடம் நேரடியாகப் பெறுவதே ஜனநாயகத்தின் வலிமை எனக் கூறினர்.
