எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர்
எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநயக்க தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் சாணக்கியன் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டது
இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பங்கெடுத்து கொண்டவர்கள்:Parliamentarians Sivagnanam Shritharan, Pathmanathan Sathiyalingam, Shanmugam Kugathasan, Shanakiyan Rasamanickam, Gnanamuthu Srineshan, Kaveenthiran Kodeeswaran, Elayathamby Srinath, and Thurairasa Raviharan also attended the meeting.
