பிரதமர் மார்க் கார்னியின் (Carney cabinet sworn in) இரண்டு தமிழ் வம்சாவளியினர் முக்கிய அமைச்சுப் பதவிகளுக்கு நியமனம்
பிரதமர் மார்க் கார்னியின் (Carney cabinet sworn in) அமைச்சரவை பதவியேற்பு – இரண்டு தமிழ் வம்சாவளியினர் முக்கிய அமைச்சுப் பதவிகளுக்கு நியமனம்
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்ற நிலையில், அவரது அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றது. இந்த புதிய அமைச்சரவையில் தமிழ் வம்சாவளியோர் இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளை ஏற்றுள்ளனர் என்பது தமிழர்களுக்கு பெருமை தரும் செய்தியாகும்.
மாண்புமிகு கேரி ஆனந்தசங்கரி, 2015 ஆம் ஆண்டு முதல் Scarborough—Rouge Park தொகுதியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கடந்த காலங்களில் நீதி அமைச்சர் மற்றும் Attorney General, மேலும் Crown-Indigenous தொடர்புகளுக்கான மற்றும் வடக்குப் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். தற்போதைய அமைச்சரவில், அவர் பொதுக் பாதுகாப்பு அமைச்சராக (Minister of Public Safety) நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேபோன்று, மாண்புமிகு அனிதா ஆனந்த், 2019 ஆம் ஆண்டு Oakville தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த காலங்களில், உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக சேவை செய்த அனிதா ஆனந்த், தற்போது வெளிநாட்டு விவகார அமைச்சராக (Minister of Foreign Affairs) நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த நியமனங்கள், கனடியத் தமிழர்களின் பங்களிப்பையும், அரசியல் அமைப்பில் அவர்கள் பெற்றிருக்கும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கின்றன. தமிழ் வம்சாவளியினருக்கான இந்த உயர்நிலை நியமனங்கள், இளைய தலைமுறைக்கு ஊக்கமளிக்கக்கூடியவை என சமூகத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மார்க் கார்னி தலைமையிலான புதிய அமைச்சரவை, கனடாவின் வருங்கால வளர்ச்சி, சமூக நலன் மற்றும் சர்வதேச உறவுகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் புதிய வழிநடத்தலை வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது.
