Events-நிகழ்வுகள்LatestNationNews

17ஆம் ஆண்டு Tamil Heritage Month ஆரம்ப விழா சிறப்பாக நடைபெற்றது

17ஆம் ஆண்டு Tamil Heritage Month ஆரம்ப விழா சிறப்பாக நடைபெற்றது

17th Annual Tamil Heritage Month-இன் அதிகாரப்பூர்வ ஆரம்ப விழா நேற்று January 6th, 2026 அன்று Queens Palace Banquet Hall, இல் சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆரம்ப விழாவில், கனடா முழுவதிலுமிருந்து சுமார் 300 Tamil community representatives கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 100 அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர். இது கடந்த 17 ஆண்டுகளின் வரலாற்றிலேயே அதிகபட்ச பங்கேற்பாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Heritage Month Coordinating Committee-யின் Founder and Chair இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். “இந்த மாதத்தையும் நினைவுகூரத்தக்கதாக மாற்றுவதுடன், இந்த முயற்சியின் மேலும் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் அடித்தளம் அமைப்போம்” என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் வெற்றிக்கு துணை நின்ற volunteers, media outlets, Tamil heritage, arts and language teachers, மற்றும் அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. The Tamil Journal எனும் எங்கள் ஊடக நிறுவனமும் இந்த நிகழ்வில் பங்கேற்றது.

இந்த மாதம் முழுவதும் கனடா முழுவதும் நடைபெற உள்ள கிட்டத்தட்ட 100 நிகழ்வுகளில் ஒன்றிலாவது மீண்டும் சந்திப்போம் என தெரிவித்தனர்.


Tamil Heritage Month – வரலாறும் நோக்கங்களும்

Tamil Heritage Month 2010ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கனடாவில் வாழும் தமிழ் சமூகத்தின் வரலாறையும், சமூக, பண்பாட்டு, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழர்கள் அளித்த பங்களிப்புகளையும் கொண்டாடுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த மாதம், தமிழர்களின் சாதனைகளை நினைவுகூர்வதுடன், கனடாவில் தமிழ் மரபையும் பண்பாட்டையும் புதுப்பித்து வளர்க்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

Tamil Heritage Month-இன் முக்கிய நோக்கங்கள்:

  • Tamil language மற்றும் literature-ன் செழுமையை கொண்டாடுதல்
  • உலகம் முழுவதும் உள்ள Tamils-இன் traditions, arts மற்றும் culture-ஐ சிறப்பித்தல்
  • அனைத்து பின்னணியிலுள்ள Canadians-க்கு Tamil history, language மற்றும் traditions குறித்து கல்வி அளித்தல்
  • கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தில் Tamils பல துறைகளில் செய்த சாதனைகளை வெளிப்படுத்துதல்
  • Tamil community-யின் வளர்ச்சியும் முன்னேற்றமும் உறுதிப்படுத்துதல்

January மாதம் Tamil Heritage Month ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணங்கள் உள்ளன. Tamils உலகம் முழுவதும் கொண்டாடும் முக்கிய திருவிழாவான Pongal இந்த மாதத்தின் நடுப்பகுதியில் வருகிறது. இது கடந்த ஆண்டின் நன்றி கூறலும், புதிய ஆண்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது. மேலும், Tamil calendar-இன் முதல் மாதமான Thai கூட January நடுப்பகுதியில் ஆரம்பமாகிறது.

Statement by Minister Miller on Tamil Heritage Month
https://www.canada.ca/en/canadian-heritage/news/2025/12/statement-by-minister-miller-on-tamil-heritage-month.html