Newsநிகழ்வுகள்-Events

தமிழகத்தில் கோவிட் – 19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு

தமிழகத்தில் கோவிட் – 19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குமாறு கனடிய தமிழ் காங்கிரஸ்( CTC )வேண்டுகின்றனர்

கோவிட் – 19 தொற்றுநோய் இந்தியாவில் மிகவும் மோசமாகவும், வேகமாகவும் பரவி வருகிறது. புதிய வளர்ச்சியடைந்த வைரஸ் திரிபுகள் அண்மைய நாட்களில், பொதுமக்களுக்கு நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இந்தியாவிலிருந்து, ஒவ்வொரு நாளும் கொடூரமான படங்களுடன் கூடிய கொரனா குறித்த செய்திகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு இந்தியாவில் கொரனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும். தற்போது தமிழக மாநிலம் இரண்டு வாரங்களாக முடக்க நிலையில் உள்ளது.

தமிழகத்தில் 152,389 பேர் கோவிட் தொற்றினால் நோயாளிகளாக்கப்பட்டுள்ளனர். 31,410 பேர் ஒக்சிசன் கொடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்ற கடுமையான நோயாளிகளாக உள்ளனர்.

நேற்று மே 12, 2021, தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு (CMPRF) நிதியுதவி வழங்குமாறு தமிழக மாநில அரசு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இந்த நிதி மருத்துவமனைகளில் ஒக்சிசன் வழங்கியுடனான படுக்கைகளை அதிகரிப்பது, உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் ஒக்சிசன் வாயுவைத் தடையின்றி வழங்குதல், மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தடுப்பூசிகள் வாங்குவது மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே செலவிடப்படும்.

தமிழ்க் கனடியர்கள் சார்பாக, கனடியத் தமிழர் பேரவை கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தவும், தமிழக மக்களின் துன்பத்தைப் போக்கவும் தமிழக அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தனது ஆதரவை அளிக்க முனைகிறது.
இந் நேரத்தில், தமிழ்நாட்டில் கோவிட் – 19 தொற்றிலிருந்து உருவாகும் பிரச்சினைகளுக்கு உதவ அனைவரின் உதவிகளையும் கோருகிறோம். உங்கள் தாராள நிதியுதவிகள் தமிழகத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய சிலரின் உயிரைக் காப்பாற்ற உதவும்.

எனவே இக் கோரிக்கையை முன்னெடுக்கவும், கற்பனை செய்யமுடியாத அளவில் அவதியுறும் தமிழக மக்களுக்கு ஒற்றுமையையுடன் கூடிய உங்களது ஆதரவுக்கரங்களை நீட்ட முன்வருமாறும், உங்கள் சுற்றம் சொந்தம் அனைவரையும் இதில் இணைத்துக்கொள்ளத் தூண்டுமாறும் தயவுடன் வேண்டுகிறோம்.

தமிழ்க் கனடியர்களின் தமிழக மக்களுக்கான இந்தக் கோவிட் -19 நிதி திரட்டும் முயற்சியை 2021 மே 17 ஆம் தேதிக்குள் முடிக்க விழைகின்றோம்.

Donation link: https://gofund.me/0fc4e9db

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!