கனேடிய பாராளுமன்றம் கலைப்பு – ஏப்ரல் 28 அன்று பொதுத் தேர்தல்
Dissolution of the 44th Parliament
கனேடிய பாராளுமன்றத்தின் 44வது கூட்டத்தொடர் மார்ச் 23, 2025 அன்று கலைக்கப்பட்டது. கனடாவின் கவர்னர் ஜெனரல் அவர்கள், பிரதமரின் பரிந்துரையின் பேரில், உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு பாராளுமன்றத்தை கலைத்தார்.

இதன் அடிப்படையில், அடுத்த பொதுத் தேர்தல் 2025 ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய அளவில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்தத் தேர்தல், கனடாவின் அடுத்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. தேர்தல் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
