தமிழீழ விடுதலைப் போராட்ட மாலுமிகள் மற்றும் போராளிகளின் வரலாற்றை பதிவு செய்யும் நூல் ஏப்ரல் 4 வெளியீடு
|
Getting your Trinity Audio player ready...
|
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய பங்காற்றிய மாலுமிகளும் போராளிகளும் ஆற்றிய அர்ப்பணிப்பும் தியாகங்களும் பதிவாகியுள்ள சிறப்புமிக்க ஒரு வரலாற்று நூல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்நூல், விடுதலைப் போராட்டத்தின் மறைக்கப்பட்ட பல அம்சங்களையும், கடற்படைச் செயற்பாடுகள் மற்றும் போராளிகளின் அரிய பங்களிப்புகளையும் வெளிக்கொணரும் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.

தமிழர் வாழும் உலக நாடுகளில் இந்த வரலாற்று நூலை அறிமுகப்படுத்தும் நோக்கில், ஏப்ரல் 4ஆம் திகதி கனடாவின் Toronto, அவுஸ்திரேலியாவின் Sydney மற்றும் இங்கிலாந்தின் London நகரங்களில் ஒரே நாளில் சிறப்பு வெளியீட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்த வெளியீட்டு நிகழ்வுகள், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாகவும், உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் ஒன்றாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
